ஆளுநருக்கு சவால் விடுத்த அமைச்சர்.

by Editor / 07-04-2023 10:46:16pm
ஆளுநருக்கு சவால் விடுத்த அமைச்சர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து தெரிவித்த ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இந்தியாவின் 40 சதவீத காப்பர் தேவையை ஸ்டெர்லைட் பூர்த்தி செய்ததாகவும், அதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டதாகவும் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை பற்றி ஆளுநர் பேசுவது கண்டனத்துக்குரியது. நான் ஆளுநருக்கு சவால் விடுகிறேன் தூத்துக்குடிக்கு சென்று உங்களால் இந்த கருத்தை பேச முடியுமா? என சவால் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via