ரஷிய எரிபொருளை இந்தியா தொடர்ந்து வாங்கும்: அமைச்சர்

by Staff / 18-04-2023 12:23:32pm
ரஷிய எரிபொருளை இந்தியா தொடர்ந்து வாங்கும்: அமைச்சர்

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, தற்போதைய விலை பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலராக உள்ளது. அமெரிக்காவில் வங்கித் துறையின் சரிவால் கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்கும் கீழ் சரிந்தது. ரஷ்யாவின் எரிபொருளை இந்தியா தொடர்ந்து வாங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார். இல்லையேல் கட்டுப்படியாகாத விலையாக எரிபொருள் மாறிவிடும். இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ளது. இந்த காரணத்திற்காக, மலிவு விலையில் எரிபொருளை வாங்குவது முக்கியம் என்று அவர் கூறினார்.
 

 

Tags :

Share via