விஜய் அரசியலுக்கு வந்தால் நமக்கு இன்னும் வலிமை - சீமான்

by Staff / 19-04-2023 02:37:57pm
விஜய் அரசியலுக்கு வந்தால் நமக்கு இன்னும் வலிமை - சீமான்

தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நமக்கு இன்னும் கொஞ்சம் வலிமையா இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவில்லத்தில் மரியாதை செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் யாரையும் ஆதரிக்க வேண்டியதில்லை. தம்பி விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும். நான் ஒரு தனித்த பேரியக்கம், எனக்கு ஒரு கனவு இருக்கிறது. நாங்கள் அடிப்படை மாற்றத்தை விரும்புகிறோம். எங்கள் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் உடன் இணைந்து பயணிப்போம் என்றார்.

 

Tags :

Share via