சுட்டெரித்த கோடை வெயிலால் தவித்த மக்களை  குளிர்வித்த கோடை மழை.

by Editor / 22-04-2023 05:48:54pm
சுட்டெரித்த கோடை வெயிலால் தவித்த மக்களை  குளிர்வித்த கோடை மழை.

கமுதி சுற்று வட்டார பகுதிகளில்  கோடை வெயில் தாக்கம் அதிகரித்து சுட்டெரித்துவெப்பம் அனல் காற்று வீசிய நிலையில் பொதுமக்கள் முதியோர்கடும் சிரமத்திற்கு உள்ளாகி வீட்டிற்குள் முடங்கி வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது இந்த நிலையில்  திடீரென இடி மின்னலுடன்கோடை மழை பொழிந்து அனைவரையும் குளிர்வித்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளான பேருந்து நிலையம்,ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை,நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

தேனி அருகே பூதிபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக 1500 தென்னை மரங்கள் சேதம்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், தேவூர், காக்கழனி, மணலூர், குருக்கத்தி, பட்டமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை.

திருவாரூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தெற்கு வீதியில் தென்னை மரத்தை  இடி தாக்கியது.


 

 

Tags :

Share via