தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை

by Editor / 24-04-2023 09:52:31am
 தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில்,இன்று பிற்பகல் 3 மணிக்கு தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா,மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு முன்னிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. சட்ட மசோதாவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆலோசனை நடைபெறவுள்து. மேலும், 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு - சட்டமுன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டத்திலிருந்து இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

 

Tags :

Share via