ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: போலீஸ் குவிப்பு

by Staff / 27-04-2023 03:45:59pm
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: போலீஸ் குவிப்பு

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்களின் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு தமிழக அரசு மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என சில அமைப்புகள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக பொய்யான பிரச்சாரத்தை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.ஆகையினால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தும் சாதியே மதவாத சக்திகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு தலைவர் மகாராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via