ஆந்திரா கஞ்சா வியாபாரி சென்னையில் கைது

by Staff / 04-05-2023 02:19:42pm
ஆந்திரா கஞ்சா வியாபாரி சென்னையில் கைது


வடசென்னைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை ஜரூர்ராக நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா ரயில்கள் மூலமாகவும் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மூலமாகவும் கடத்திவரப்பட்டு சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை நடைபெற்று வந்தன இந்த நிலையில் இதனை தடுக்கும் வண்ணம் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி கஞ்சா பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரியை பிடிக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்

இந்த நிலையில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஏற்கனவே பிடிபட்ட நபர்களை வைத்து மொத்த அளவில் கஞ்சா வேண்டுமென அவர்களிடம் தொடர்பு கொண்டு தாங்களே நேரில் வந்து தரும்படியும் அழைத்துள்ளனர்.இதனையடுத்து அவர்கள் 50 கிலோ கஞ்சாவுடன் ஆந்திராவில் இருந்து காசிமேடு ஜீரோ கேட் பகுதிக்கு வந்த நிலையில் அங்கு மறைந்திருந்த வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அவர்களை கஞ்சா மூட்டைகளுடன் கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த அர்லே மணிகண்டா(22) மற்றும் பூபால பட்டினம் பகுதியை சேர்ந்த போத்ராஜு சேசு(32) என்பதும் தெரியவந்தது.அவர்களிடம் இருந்து 50 கிலோ கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது .விசாரணையில் போத்ராஜு சேசு மீது ஏற்கனவே ஆந்திர மாநில காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது .ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அதிக அளவில் மொத்தமாக கஞ்சாக்களை விற்பனை செய்து வந்த நபர் என்பதையும் போலீசார் உறுதிப்படுத்திய போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via