அதிமுகவிடம் இந்த 3 தொகுதிகளைக் கேட்கும் புதிய தமிழகம்

by Staff / 13-03-2024 01:34:20pm
அதிமுகவிடம் இந்த 3 தொகுதிகளைக் கேட்கும் புதிய தமிழகம்

பாஜக கூட்டணியில் கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இணைந்தது. தற்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சி தென்காசி, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளை கேட்டு உள்ளது. எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்ற விவரம் ஓரிரு நாளில் தெரியவரும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via