புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்தில் சிக்கி 57 பேர் காயம்

by Editor / 02-01-2023 09:02:51am
புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்தில் சிக்கி 57 பேர் காயம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.புதுச்சேரியில்ரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்தில் சிக்கி 57-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதுச்சேரி அரசு பொது மருத்துழமனையில் 28 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 21 பேரும், கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேரும் சிகிச்சை பெற்றனர். இதை தவிர தனியார் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்றனர்

 

Tags :

Share via