ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by Editor / 05-08-2022 09:29:39am
ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகம் ,கேரளா,கர்நாடக உள்ளிட்ட மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடித்துவருகின்றது,இதன் காரணமாக மேற்குதொடர்ச்சிமலை அடிவாரப்பாகுதியிலுள்ள  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.அணை நீர்மட்டம் - 120.07 அடி, நீர் இருப்பு - 93,582 டிஎம்சி, நீர்வரத்து - 2,00,000 கன அடி, நீர் வெளியேற்றம் - 2,10,000 கன அடியாக உள்ளது.மேலும், ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2.45 லட்சம் கனஅடி இருந்து 2 லட்சம் கனஅடியாக குறைந்தது.ஒகேனக்கலில் நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
 

Tags : Normal life affected by floods in Okanagan

Share via