கள்ளழகர் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

by Editor / 05-05-2023 09:42:38am
 கள்ளழகர் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தில் சேர்ந்த கள்ளழகர் முல்லைப் பெரியாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

தொடர்ந்து முல்லைப் பெரியாற்றின் கரையில் எதிர்சேவை நடைபெற்றது .இதில் 10000 - க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி முன்னிட்டு இரவு சாமி வீதி உலா நடைபெறும் பகுதிகளில் சொக்கப்பர் கொளுத்தி கொண்டு செல்லப்பட்டனர்.அதன் பின்பு கள்ளழகர் குதிரை வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை கள்ளழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் முல்லைப் பெரியாற்றில் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.அதேபோல் உப்பார்பட்டி சேர்ந்த கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லை பெரியாற்றம் கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தோ கோவிந்தோ என கோசமிட்டு எதிர்சேவை நிகழ்ச்சியை கண்டு களித்தனர் அதன்பின்பு ஆற்றங்கரையில் வைக்கப்பட்ட பந்தலில் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் சுவாமியை வைக்கப்பட்டுள்ளது.

உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
 

 

Tags :

Share via