தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் - கனிமொழி ட்வீட்

by Staff / 22-05-2023 01:37:40pm
தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் - கனிமொழி ட்வீட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திமுக எம்.பி கனிமொழி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். "தங்கள் வாழ்வுரிமைக்காக அறவழியில் போராடிய எளிய மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் இது, இம்மண்ணையும் மக்களையும் காத்திட, களம் கண்டு உயிர் நீத்த போராளிகளுக்கு எம் வீரவணக்கம். மக்கள் நலனையும் சூழலியல் பாதுகாப்பையும் முதன்மையாகக் கொண்டு பணியாற்றிட இந்நாளில் உறுதியேற்போம்" என்று கனிமொழி எம்.பி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

 

Tags :

Share via