குழந்தை திருமணம்,பெண்கள் வன்கொடுமை விழிப்புணர்வு 

by Reporter / 17-07-2021 07:27:41pm
 குழந்தை திருமணம்,பெண்கள் வன்கொடுமை விழிப்புணர்வு 

 

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் ஓடைப்பட்டி காவல் நிலையம் சார்பாக குழந்தைகள் திருமணம் மற்றும் பெண்கள் வன்கொடுமைகள் அதனால் ஏற்படும் விளைவுகள் அதனை தடுப்பது சம்பந்தமாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், போக்சோ சட்டம்,குழந்தைத் திருமணம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல், பாலியல் அத்துமீறல், தற்கொலை செய்து கொள்வதை தடுப்பது குறித்த தகவல்களை மகளிர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக விளக்கமாக முன்னெடுத்து வைக்கப்பட்டது.
பெண் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திடவும், அவர்களுடைய ஒழுக்க நலன்களை கண்காணித்திடவும்  பெற்றோர்கள் முன்வந்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்த  வேண்டும் என "பெண் கல்வியால் உயர்ந்த உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் உமாதேவி" பெண் குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவத்தினை முன்வைத்து உரையாற்றினார். 
கூட்டுக் குடும்பங்கள், அண்ணன் தம்பிகளுக்கான ஒற்றுமை அதனால் குடும்பத்தில் ஏற்படும் வலிமை கலந்த சந்தோஷம் மற்றும் "கூட்டுக் குடும்பங்களை சுட்டிக்காட்டி பெண்களின் பாதுகாப்பு குறித்து ஓடைப்பட்டி சார்பு ஆய்வாளர் செந்தில்ராஜ் விளக்கவுரை அளித்தார்.குழந்தைகளை வளர்க்கும் விதம் குறித்து காமாட்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து எடுத்துக் கூறினார்.குழந்தைகளை,குழந்தைகளாகவே வாழ விடுங்கள் வளர விடுங்கள் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அர்ஜுனப்பெருமாள் விளக்கவுரை தொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் மங்கையர் திலகம்,மகளிர் சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி, சி.ஐ.டி.ராஜா, ஓடைப்பட்டி காவலர்கள், ஊராட்சி துணைத் தலைவர் திருப்பதி, ஊராட்சி செயலர் பன்னீர்செல்வம்,நாடார் உறவின்முறை தலைவர் மற்றும் நிர்வாகிகள்,மகளிர் சுய உதவி குழுவினர்,ஆட்டோ சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கொரோனா பரவல் விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுகன்யா த.முரளிதரன்
தேனி மாவட்ட நிருபர் 
 

 

Tags :

Share via