இந்தியாவில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துகள் ஒரு பார்வை...

by Editor / 04-06-2023 09:34:30am
இந்தியாவில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துகள் ஒரு பார்வை...

இந்தியாவில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துகள் ஒரு பார்வை...


 1956 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி அரியலூரில் நிகழ்ந்த விபத்தில் 250 பேர் உயிரிழந்தனர்.விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

டிசம்பர் 23, 1964 - தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே கடலில் ஏற்பட்ட புயலால் பயணிகள் ரயில் கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 126 பயணிகள் உயிரிழந்தனர்.


முன்னாள் பிரதர் லால்பகதூர் சாஸ்திரி ரயில்வே அமைச்சராக பதவி வகித்த போது நிகழ்ந்த விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று, தனது அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்தார்.

ஜூன் 16, 1981 – பீகாரில் பாகமதி ஆற்றி்ல் உள்ள பாலத்தில் பயணிகள் ரயில் ஒன்று பாய்ந்தது. இந்த விபத்தில் 750 பயணிகள் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 20, 1995 – ஃபிரோசாபாத்தில் புருசோத்தம் விரைவு ரயில் கலிண்டி பயணிகள் ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 305 பயணிகள் உயிரிழந்தனர்.

நவம்பர் 26, 1998- பஞ்சாப் மாநிலம் கானா மாவட்டத்தில் ஜம்முதாவி விரைவு ரயில் மற்றும் சீல்டா விரைவு ரயில் இரண்டும் ப்ரண்டியர் கோல்டன் டெம்பிள் ரயிலின் தடம் புரண்டு கிடந்த மூன்று பெட்டிகளின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 2, 1999- பிரம்மபுத்திரா மெயில் ஆவாத் விரைவு ரயிலுஅப் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 285 பயணிகள் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த வீரர்கள்.

செப்டம்பர் 9, 2002- பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் ரப்கானி ஆற்றில் தடம் புரண்டு கிடந்த ஹவுரா ராஜதானி ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 140 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். தீவிரவாத தாக்குதலால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

மே 28, 2010- மேற்குவங்க மாநிலத்தில் ஜார்கிராம் மாவட்டத்தில் இருந்து மும்பை சென்ற ஜானேஸ்வரி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

நவம்பர் 20, 2016- கான்பூரில் ஒருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் புக்ரியான் என்ற இடத்தில் இந்தோர்- ராஜேந்திரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 152 பேர் உயிரிழந்தனர். 260 பயணிகள் காயமடைந்தனர்.

 

Tags : இந்தியாவில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துகள் ஒரு பார்வை...

Share via