சிவசேனா-பாஜக கூட்டணி தொடரும் - ஷிண்டே அறிவிப்பு

by Staff / 05-06-2023 02:00:30pm
சிவசேனா-பாஜக கூட்டணி தொடரும் - ஷிண்டே அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் உட்பட எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் சிவசேனாவும் (ஷிண்டே பிரிவு) பாஜகவும் இணைந்து போட்டியிடும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். கூட்டத்தில், நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல் உட்பட, வரும் அனைத்து தேர்தல்களிலும், சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் பாஜக இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via