நடராஜர் கோயில் பூஜை தாரர்  தீட்சிதர் தன்னை தள்ளிவிட்டு  நிலைகுலைய செய்ததாத போலீஸில் புகார்.

by Editor / 28-06-2023 10:31:23pm
நடராஜர் கோயில் பூஜை தாரர்  தீட்சிதர் தன்னை தள்ளிவிட்டு  நிலைகுலைய செய்ததாத போலீஸில் புகார். சிதம்பரம் நடராஜக் கோயில் பூஜையிலிருந்த போது ஜூன் 27-ம் தேதி சுமார் மாலை 6.45-7.00 மணியளவில் இந்து அறநிலையத் துறையினர் மற்றும் காவல் அதிகாரிகள் பூஜைக்கு இடையூறு செய்து என்னை தள்ளிவிட்டு நிலைகுலைய செய்தனர் என எஸ்.ஆர்.கற்பக கணனேச தீட்சிதர் நகர காவல் ஆய்வாளருக்கு புகார் மனு பதிவு தபாலில் அனுப்பியுள்ளார். புகார் மனு விபரம்: நான் நடராஜர் கோயிலில் கடந்த 27.06.2023 அன்று அன்றைய பூஜைகாரராக தினபடி கோயில் பூஜை செய்யும் பணியிலிருந்தபோது சுமார் மாலை 6.45 - 7.00 மணியளவில் பின்னிட்டு பெயர் தெரிந்து கொண்ட அறநிலைய அதிகாரிகள், பெண் காவல் துறையினர் ஸ்ரீதேவி, வேல்விழி, சரஸ்வதி, பொன்மகரம் மற்றும் சில பெண் காவலர்கள் திடிரென்று கனகசபை மீதேறி வேகமாக, கனசபைக்குள் அத்துமீறி நுழைய முயன்றபோது அப்போது பூஜை பணியிலிருந்த என்னை ஆக்ரோஷமாக தள்ளிவிட்டு என்னை நிலைகுலைய வைத்து நான் அணிந்திருந்த ஆடை மற்றும் பூணூல் அறுந்துபோகும் வகையில் தள்ளிவிட்டு, கனசபைக்குள் நுழைந்து என் பூஜை பணிக்கு இடையூறு மற்றும் எதிர்பாரத வகையில் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இப்படி நடந்திருந்தால் என் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். என் மீது நிலைகுலைய வைக்கும் வகையில் தாக்குதல் செய்ததை என் அப்பா எஸ்.எஸ். ராஜா தீட்சிதர், என்.ஆர்.நடராஜ தீட்சிதர் மற்றும் சில தீட்சிதர்கள் கோயில் பணியாளர்கள் சிவகாமி. தில்லைநாயகம் மற்றும் பக்தர்கள் ஆகியோர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து எனக்கு உதவ முன் வந்தார்கள். என் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீதேவி, வேல்விழி, சரஸ்வதி, பொன்மகரம் மற்றும் அவருக்கு உதவிய பெண் காவலர்கள் மீது உரிய வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். எதிர்பாரராத தாக்குதலால் நான் அதிர்ச்சியுற்று மயக்கமானேன். பூஜை பணியை தொடர்ந்து செய்து முடிக்க வேண்டிய கடமை உள்ளதால் என் உடல் வலி மன வலி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு என் தெய்வ பணியை இரவு 10.00 மணிக்கு முடித்தேன். காலை திரும்பவும் வலியுடன் பொறுப்பை இன்றைய பூஜை காரரிடம் ஒப்படைத்து, மருத்துவரிடம் உடல் நலம் பெற சிகிச்சை பெற்று, அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு தற்போது இந்த புகாரை பதிவு தபாலில் அனுப்பினேன். எனக்கு அதிர்ச்சியும் உடல் வலியும் உள்ளதாலும் நேரில் வந்து புகார் கொடுக்க மன தைரியம் இல்லாததால், அச்சம் உள்ளதால் புகார் மனு பதிவு தபாலில் அனுப்பிள்ளேன். அரசு அதிகாரிகள் என்னை பூஜை பணியிலிருந்து வழிப்பாட்டுமிடத்தில் தாக்கிய இடையூறு செய்த சட்ட விரோத நடவடிக்கைக்கு வழக்கு பதிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகார் மனு நகல்களை விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிதம்ரம் ஏஎஸ்பி ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.
 

Tags :

Share via