சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா குடியரசு தலைவர்க்கு அழைப்பு

by Editor / 24-07-2023 11:38:43pm
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா குடியரசு தலைவர்க்கு அழைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த அழைப்பை ஏற்று, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னைக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி வருவது உறுதியாகியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர். குடியரசு தலைவர் வருகையையொட்டி தேவையான நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தொடங்கியுள்ளது. பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற உள்ளது.

 

Tags :

Share via