ரூ.84 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன

by Editor / 27-07-2023 09:11:07pm
 ரூ.84 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன

இன்று மக்களவையில், ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக சில எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். அதில், “ஜூன் 30ம் தேதி வரை ரூ.2,72,000 கோடி ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இன்னும் ரூ.84,000 கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. நோட்டுகளை திரும்ப பெற செப்டம்பர் 30 கடைசி நாள்" என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via