தக்காளி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது

by Admin / 30-07-2023 03:45:32pm
 தக்காளி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது

தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதின் காரணமாக தக்காளி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை கோயம்பேடு மார்க்கெட்டில் 190 ரூபாய்க்கும் சில்லறை விலை 200 ரூபாய்க்கு வாங்க க்கூடிய சூழல் உருவாகி உள்ளது. கடந்த மாதத்தில் முப்பது ரூபாய்க்கு மேல் விற்பனையான தக்காளி இன்றைக்கு இந்த விலைக்கு உயர்ந்திருப்பது விளைச்சல் இன்மை காரணமாக சொல்லப்படுகிறது .நான்கு கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பொழுது மக்கள் விலை உயர்வை எதிர் நோக்க முடியாமல் இருந்த சூழலில், தற்பொழுது அது படிப்படியாக உயர்ந்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு கவலை அளித்துள்ளது..  தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி தொக்கு என்கிற சமையல் நிலை இரண்டு மாதங்களாக இல்லாமல் போய்விட்டது ,அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த , நியாயவிலை  கடைகளில் விற்பனை செய்தாலும் ,வரத்து இல்லாததன் காரணமாகவும் பற்றாக்குறையின் காரணமாகவும் அரசால் முழுமையாக பொதுமக்களுக்குவழங்க முடியாதநிலை. தக்காளியின் விளைச்சல் அதிகரித்தால் மட்டும் தான் விலை குறையும்.

 

 

Tags :

Share via