1 கோடி பார்வைகளை கடந்த ஜெயிலர்

by Staff / 03-08-2023 01:54:41pm
1 கோடி பார்வைகளை கடந்த ஜெயிலர்

ஜெயிலர் படத்தின் Showcase வீடியோ நேற்று இணையத்தில் வெளியானது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்தின் புரோமோஷன்கள், முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி கடந்த 2 வாரமாக ஜெயிலர் படம் சமூக வலைத்தளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. தற்போது ஜெயிலர் படத்தின் Showcase வீடியோ யூடியூபில் வெளியாகி 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. மேலும், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

Tags :

Share via