குண்டாறு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையை மூடிய கோட்டாட்சியர் அலேக்காக தூக்கி வாகனத்தை கொண்டு சென்ற வாகன ஓட்டிகள்.

by Editor / 03-08-2023 11:07:16pm
குண்டாறு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையை மூடிய கோட்டாட்சியர் அலேக்காக தூக்கி வாகனத்தை கொண்டு சென்ற வாகன ஓட்டிகள்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பகுதி கண்ணுப்புலிமெட்டு என்றழைக்கப்படும்  குண்டாறு  நீர் தேக்க பகுதி இங்கு ஏராளமான இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன மேலும் மாவட்டத்தில் சிறிய நீர் தேக்கமான குண்டாறு  நீர்த்தேக்கத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் இங்கு படகு சவாரியும் இயக்கப்பட்டு வருகின்றது மேலும் இந்தப் பகுதியில் ஏராளமான தனியாருக்கு சொந்தமான நிலங்கள் வழியாக நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டு ஜீப் மூலம் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு குளிக்க வைத்து அழைத்து வரும் செயலும் நடைபெற்று வருகின்றன. கரடு முரடான உயிருக்கு ஆபத்தான பாதைகளில் வாகனங்கள் செல்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நீர் வழிப்பாதைகளை அடைத்து தனியார்  நீர்வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ளதை தொடர்ந்து ஏற்கனவே அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த நிலையில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சீசன் காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குண்டாறு நீர்த்தேக்கத்திற்கும் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள தனியார்  நீர்வீழ்ச்சிகளுக்கு குளிப்பதற்கு ஜீப்புகளில் சென்று வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து தென்காசி கோட்டாட்சி தலைவர் லாவண்யா தலைமையில் செங்கோட்டை வட்டாட்சியர் முருகசெல்வி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் குண்டாறு பகுதியில் இருக்கும் தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு கதவுகளை வைத்து மூடினர். மேலும் தனியார்  நீர்வீழ்ச்சி என்ற பெயரில் சுற்றுலா பயணி கட்டாயப்படுத்தி அதிக கட்டணங்களை வசூலிக்கும்  செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் தேதி அன்று இந்த பகுதியில் கேட் போட்டு மூடப்பட்ட நிலையில் இன்று 3 ஆம் தேதி ஏராளமான சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வருவாய்த்துறை சார்பில் வாகனங்கள் செல்லக்கூடாது என்பதற்காக போடப்பட்ட கேட்டை அலேக்காக  தூக்கி வாகனத்தை அந்த பகுதிக்குள் கொண்டு சென்று மீண்டும் அலேக்காக கேட்டை மூடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் வருவாய்த்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குண்டாறு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையை மூடிய கோட்டாட்சியர் அலேக்காக தூக்கி வாகனத்தை கொண்டு சென்ற வாகன ஓட்டிகள்.
 

Tags :

Share via