கலைஞரின் ஐந்தாவது நினைவு நாள்

by Admin / 07-08-2023 08:37:22am
கலைஞரின் ஐந்தாவது நினைவு நாள்

கலைஞர் கருணாநிதி தமிழ் சமூகத்தின் ஒரு தவிர்க்க முடியாத தலைவர். திராவிட இயக்க பாசறையில் பெரியார்- அண்ணா உள்ளிட்ட தலைவர்களோடு நெருக்கமான அன்பையும் பேரா தரவையும் பெற்றிருந்த ஒரு சிறந்த அரசியல் தலைவர். எம்ஜிஆர் ரோடு நெருக்கமாக இருந்து அரசியலில் பிரிந்து நின்றாலும் அவர் மீது கொண்ட நட்பை கடைசி வரைக்கும் கடைபிடித்தவர். முன்னாள் முதல்வர் காமராஜர், சென்னை மாகாண கவர்னர் ஜெனரல் ராஜாஜி போன்ற தலைவர்களோடும் எதிர்க்கட்சி என்கிற நிலையில் எதிரியாக நில்லாமல் அவர்கள் மீது அன்பு கொண்டு பழகியவர். ஓர் அரசியல் ஆளுமை திரைப்படத்திலும் எழுத்திலும் ஜெயித்திருப்பது என்பது மிக அரிதான நிலைப்பாடு. ஆனால், கலைஞர் பேச்சிலும் எழுத்திலும் அரசியலிலும் ஓர் விற்பனராகவே இறுதிவரை திகழ்ந்தவர் .ஆட்சியில் இல்லாத பொழுது கூட ,தம் கட்சியினரை அரவணைத்து செல்வதில் ஓர் ஆளுமை மிக்க தலைவராக திகழ்ந்தவர் ஆறு முறை முதலமைச்சராக இருந்து தமிழகத்திற்கு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தந்தவர்..அவரின், இந்த ஐந்தாவது நினைவு நாளில் அவரை நினைவு கூறுவோம்..

கலைஞரின் ஐந்தாவது நினைவு நாள்
 

Tags :

Share via