இந்தியா என்ற உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம்” மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி.

by Editor / 07-08-2023 08:36:58am
இந்தியா என்ற உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம்” மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் அனுஷ்டிக்கப்படுகிறது.. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், “தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களே, அப்படித்தான் INDIA-வுக்கான குரலை எழுப்ப தொடங்கி இருக்கிறோம். அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு. சுயமரியாதை, சமூகநீதி, சம தர்மம், மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி இந்தியா என்ற உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via