சாதித்த சந்திராயன் 3 - விண்கலம் நேற்று இரவு வீடியோவை எடுத்து அனுப்பி உள்ளது

by Admin / 07-08-2023 10:25:31am
சாதித்த சந்திராயன் 3 - விண்கலம் நேற்று இரவு வீடியோவை எடுத்து அனுப்பி உள்ளது

சாதித்த சந்திராயன் 3 - விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் 14ஆம் தேதி எல் வி எம் 3 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது இந்த வெண்கலத்தை கண்காணிப்பதற்காக பெங்களூர் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வெண்கல சுற்றுப்பாதையை நீடிக்கும் பணியை செய்து வருகிறார்கள் விஞ்ஞானிகள்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி சந்திராயன் 3  வெண்கலம் சுற்றுப்பாதையினுடைய ஐந்தாவது முறையாக நீடிக்கப்பட்டது. இந்த மாதம் ஒன்றாம் தேதி அது புவி வட்டப்பாதையில் இருந்து நிலவினுடைய சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது. தற்பொழுது, அது நீள் வட்டசுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக் கொண்டு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

நிலவின் சுற்று வட்ட பகுதியில் இயங்கி வரும் சந்திராயன்- 3 நேற்று இரவு வீடியோவை எடுத்து அனுப்பி உள்ளது. இவ் புகைப்படம் விஞ்ஞானிகளிடம் பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் காணப்படும் மேடு பள்ளங்களை இது தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதித்த சந்திராயன் 3 - விண்கலம் நேற்று இரவு வீடியோவை எடுத்து அனுப்பி உள்ளது
 

Tags :

Share via