அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.-

by Editor / 07-08-2023 11:00:04am
அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.-

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை. கைது செய்வதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.மேலும் ஆகஸ்ட் 12 ஆம் தேதிவரை அவரை காவலில் எடுத்துவிசாரிக்க உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

 

Tags :

Share via