இன்று டி20 மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு

by Admin / 08-08-2023 09:39:02am
இன்று டி20 மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு

இன்று டி20 மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே, நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டி இன்று தொடங்குகிறது, ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 போட்டியில் மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றால் தான் இந்தியா இந்த தொடரை வெல்லும், இல்லையெனில் ,மூன்றாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றால் தொடர் அவர்களுடைய கைவசமாகும்,, இது இந்தியாவிற்கு வாழ்வா?சாவா? என்கிற மாதிரியான ஒரு போட்டி. பொதுவாக, சொல்லப்படுகிற கருத்து கணிப்பு இந்த முறையும் இந்தியா தான் வெல்லும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு போட்டிக்கும் இதே மாதிரியான கருத்துக்கணிப்பு வெளியாகி அது பொய்த்து போனது அவதானிக்கத்தக்கது.

 

Tags :

Share via