7 மாதத்தில் 2,234 போக்சோ வழக்கு

by Staff / 12-08-2023 02:31:13pm
7 மாதத்தில் 2,234 போக்சோ வழக்கு

கேரளாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில், கடந்த 7 மாதங்களில் 2,234 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கேரளாவில் 8 சிறுமிகள் கொலை மற்றும் 833 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் சராசரியாக நாளொன்றுக்கு 10 போக்சோ வழக்குகள் பதிவாவதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 16,944 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த மே 2021 முதல் மார்ச் 2022 வரையிலான 10 மாதங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் 4,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via