சந்திரயான் 3 விண்கலம் 4வது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உயரம் குறைக்கப்பட்டது.

by Editor / 16-08-2023 02:33:18pm
சந்திரயான் 3 விண்கலம் 4வது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உயரம் குறைக்கப்பட்டது.


இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் சந்திரயான் 3 செயற்கோள் புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து செயற்கை கோளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்திரயான் விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு கட்டமாக புவி சுற்று வட்ட பாதையில் விண்கலத்தை உயர்த்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் புவியின் இறுதி சுற்று வட்டப்பதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. கடந்த 5ம் தேதிகடைசி கட்டமாக லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவின் சுற்று வட்டபாதைக்குள் சந்திராயன் 3 நுழைந்தது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது


அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.


ஆகஸ்ட் 14ம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் உயரம் 150 கிமீ x 177 கிமீ ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதிக்கட்டடமாக இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் 153*163 கிலோ மீட்டராக இன்று குறைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ஆகஸ்ட் 23ம் தேதி விண்கலத்தில் இருந்து விக்ரம் என்ற லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் மேற்பரப்பில் இறங்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.

 

Tags : சந்திரயான் 3 விண்கலம் 4வது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதை

Share via