தன் உயிரை பணயம் வைத்து ஆட்டை மீட்ட வீரர்

by Staff / 08-01-2024 01:32:23pm
தன் உயிரை பணயம் வைத்து ஆட்டை மீட்ட வீரர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கடாட்சபுரம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருப்பவர் ஞானராஜ். இவர் ஆடு மாடு வைத்து தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது ஒரு ஆடு மட்டும் காணாமல் சென்றுள்ளது. அதை காட்டுப்பகுதியில் தேடிய போது அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தற்போது பெய்த கனமழை காரணமாக ஆழ்துளை கிணறு முழுமையாக 20 அடிக்கு மேல் ஆழமாக இருந்துள்ளது.அதில் இருந்த ஆடு சத்தம் கேட்கவே அவர் அந்த ஆட்டை மீட்க முயற்சித்து முடியாததால் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் அங்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறை வீரர்கள் பார்த்தபோது அந்த ஆழ்துளை கிணற்றில் உள்ளே கயிறை கட்டி ஆட்டை மிட்க்க முயற்சித்தும். முடியாத காரணத்தால் தீயணைப்பு வீரர் துரைசிங்கத்தை இடுப்பு மற்றும் காலில் கயிறை கட்டி மற்ற வீரர்கள் அருகில் நின்று கயிறை பிடித்துக் கொண்டு தீயணைப்பு வீரர் துரை சிங்கத்தை தலைகீழாக அந்த சிறிய ஆழ்துளை கிணற்றில் இறக்கி விட்டனர்.அப்போது அவர் தலைகீழாக ஆழ்துளை கிணற்றில் உள்ளே முழுமையாக சென்று அங்கு உயிருக்கு போராடிய ஆட்டை பத்திரமாக கையால் பிடித்து வெளியே வந்தார். தன்னுடைய உயிரை பணயம் வைத்து ஆழ்துளை கிணற்றில் இருந்த ஆட்டை உயிருடன் மீட்டார்.

 

Tags :

Share via