தமிழகத்தில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய 71தொழிற்பயிற்சி நிலையங்கள் தனியார் பங்களிப்போடு தயாராகியது.

by Editor / 17-08-2023 10:16:14pm
தமிழகத்தில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய 71தொழிற்பயிற்சி நிலையங்கள் தனியார் பங்களிப்போடு தயாராகியது.

தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசின் 3 தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, இதில் வி.கே. புதூர், தென்காசி, கடையநல்லூர், ஆகிய மூன்று இடங்களில் அரசு தொழிற்பயிற்ச்சி மையங்கள் இயங்கி வருகின்றன, இந்த 3 தொழிற்பயிற்சி மையங்களில் 688 மாணவ,மாணவிகள் பயின்றுவருகின்றனர்.இந்த நிலையில் தொழில் பயிற்சி நிலையங்களை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு தனியார் நிறுவனங்களோடு கைகோர்த்து தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலமாக சிறந்த தொழிற் கலைஞர்களை உருவாக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது, இதன் ஒரு பகுதியாக "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்கின்ற வாசகத்தை மெய்ப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள 71 தொழிற்பயிற்சி நிலையங்களை பிரபல டாடா நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று நிறைவைபெற்றுள்ளன,. இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் கடையநல்லூர் ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் தலா 33 கோடிரூபாய்  மதிப்பீட்டில் தொழிற் பயிற்சி நிலையங்களை மேம்படுத்தும்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக தென்காசியில் நவீனமான முறையில் தமிழக அரசின் தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,இங்கு  மூன்று வகுப்புகள்  குளிர்சாதன வசதிகளோடு கணினி வசதியோடு  அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரோபோக்களும் இங்கு அமைக்கப்பட்டு   கணினி மூலம் புரோகிராம் செய்து இயக்கப்படும் ரோபோக்களும் இடம்பெற்றுள்ளன, மேலும் வரும் காலங்கள் மின்சாரம் மூலமாக பேட்டரி கார் , பேட்டரி ஆட்டோக்கள், பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவைகளும் இங்கு மாணவர்களின் பயிற்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, அதன் அடிப்படையில் ஒரு பேட்டரி கார், ஒரு டீசல் ஆட்டோ, மேலும் பேட்டரி ஆட்டோக்களும், மரங்களை கம்ப்யூட்டர் மூலம் அழகுப்படுத்தி கதவு உள்ளிட்ட பொருட்கள் செய்யும் இயந்திரங்களு,ம் நவீன வகையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள லேத் இயந்திரங்களும், அனைத்தும் கணினி மூலம் இயக்கப்படும் விதமாக தொழிற் பயிற்சி நிலையத்தில் புதியதாக துவக்கப்பட்டுள்ளன, மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு கணினி அறிவை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களும் மத்திய அரசால் மாநில அரசோடு இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளன அதற்கான அமைப்புகள் தென்காசி அரசு தொழில் பயிற்சி கூடத்தில் அமைய பெற்றுள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நவீன முறையில் கல்வியை மேம்படுத்தும் விதமாக தொழில் பயிற்சி நிலையங்கள் அரசால் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருப்பதால் இதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

 

Tags : govt iti

Share via