லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது

by Staff / 20-08-2023 03:09:54pm
லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியதாக தற்போது அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் திடீரென்று ஏற்பட்ட கோளாறால், நிலவில் தரையிறக்குவதில் சிக்கல் நிலவியது. இந்த நிலையில், தற்போது நிலவில் லூனா-25 விழுந்து நொறுங்கியுள்ளது. ரஷ்ய விண்கலம் விழுந்து நொறுங்கியதால் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறயிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via