ஓணம் கேரளத்து மக்களின் பாரம்பரிய திருவிழா-இன்றிலிருந்து பத்து நாள்கள்..

by Admin / 20-08-2023 03:51:12pm
ஓணம் கேரளத்து மக்களின் பாரம்பரிய திருவிழா-இன்றிலிருந்து பத்து நாள்கள்..

ஓணம் கேரளத்து மக்களின் பாரம்பரிய திருவிழா. மூலம் கேரளத்தில் ஜாதி மதங்களைக் கடந்து கொண்டாடப்படும் மிக ஒற்றுமை திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த திருவிழா ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் தொடங்குகிறது. சித்திரை சுவாதி, விசாகம், அனுஷம் ,கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது .

கடைசி நாளன்று அதாவது திருவோண நட்சத்திரநாளன்று . கேரளத்து மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் பூக்கோலங்கள் இட்டு புத்தாடை கட்டி, விதவிதமான இனிப்பு பலகாரங்களை செய்து ,அறுசுவை உணவோடு காத்திருந்து தீபங்கள் ஏற்றி மகாபலி மன்னனை வரவேற்க காத்திருக்கும் காலம்

 ஓண பண்டிகையின் பொழுது சிவாலயத்தில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியை தூண்டி பிரகாசிக்க வைத்தது ஒரு எலி. அந்த எலிக்கு சிவபெருமான் மூன்று லோகத்தையும் ஆளும் அதிகாரத்தை வழங்கினார் .அந்த எலிதான் மறு பிறப்பில் மகாபலி என்ற பெயருடன் கேரளத்து மன்னனாகப் பிறந்து ஆளக்கூடிய ஆட்சியைப் பெற்றிருந்தான்.. மகாபலி மன்னனுடைய ஆட்சி காலத்தில் மக்கள் ,எந்த விதமான துன்பம் துயரங்கள் அடையாமல், மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.. இதனை பொறுக்க முடியாத தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டார்கள். போரில் மகாபலி வெற்றி பெறவே, தேவர் குலத்தைச் சார்ந்தோர் திருமாலிடம் சென்று முறையிட்டனர் .திருமாலை மகனாக அடைய வேண்டி காசிவ முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க அப்படியே, அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார், திருமால்.

மக்களுக்கு நன்மையையும் தான தர்மங்களையும் யாகங்களையும் நடத்துவதில் சிறந்து விளங்கிய மகாபலி மன்னனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் கேட்டதற்கு இணங்க, மகாவிஷ்ணு வாமன அவதாரம்எடுத்து தாம் தவம் மேற்கொள்வதற்காக மூன்றடி மண் வேண்டும் என்று மகாபலியிடம்  கேட்க  அசுரகுரு வந்திருப்பது விஷ்ணுவின்  அவதாரம் என்று தெரிந்து, மகாபலி இடம் அவன் கேட்கும் வரத்தை தந்து விட வேண்டாம் என்று தடுத்த பொழுதும் ,காக்கும் கடவுள்  திருமாலே தன்னிடம் வந்து கையேந்தி நிற்கின்ற பொழுது, தான் எப்படி தானம் தராமல் போக முடியும் என்று சொல்லி மூன்றடி மண்தானமாக தர... உடன் திருமால் 3 அவதாரங்களை எடுத்து ,ஓரடியால் பூலோகத்தையும் மற்றொரு அடியால் தேவலோகத்தையும் மூன்றாவது அடிக்கு இடம் இல்லையே என்று கூறி மகாபலியின் தலை மேல் மூன்றாவது அடியை வைத்து அழுத்த ,மகாபலி அதால பாதாளத்திற்குள் சென்றான். அந்த சமயத்தில் மகாபலி மன்னன் திருமால் இடம் ஒரு வரம் வேண்டினான். அந்த வரம் தான் ஆண்டுக்கு ஒரு முறை தாம் வந்து தன்னுடைய மக்களை காண வேண்டுமென்று .அதற்கு வாமன அவதாரம் எடுத்த விஷ்ணு சரி என்று ஒப்புதல் வழங்கினார். அந்த நாளே திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களுக்காக வாழ்ந்த மன்னனை அந்த அவதாரத்தின் புருஷனால் பாதாள லோகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மன்னன் .மீண்டும் தங்களை காண வருகிற பொழுது விழாவாக கொண்டாட வேண்டும் என்று சொல்லி கேரளத்து மக்கள் கொண்டாடும் வழிபாட்டு விழாவே ஓணம் . இது  சத்திய விருந்து என்றும் சொல்லப்படுகிறது. கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல்,,தோறன், காலன், ஓலன், பச்சடி, இஞ்சி, புளி- மாங்காய் ,எரிச்சேரி, கூட்டுக்கறி ஆகியவற்றை தலைவாழையில் படையி லி ட்டு  வரும் மன்னனுக்கு பரிமாறுவது ஐதீகம். இதற்குப் பின்னர்  சர்க்கரை, ஒப்பேரி, காவற்றல்,விளம்பி சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து வயிறார உண்டு. பண்டிகையை கும்மி கொட்டி புத்தாடை கட்டிய பெண்களும் ஆண்களும் சேர்ந்து வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும் பந்துகள் விளையாடியும் ஓணத் திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள்.. இந்நிகழ்வின் பொழுது, மகாபலி மன்னன்அவர்களுக்கு ஆசி வழங்குவதாகவும் ஆசி வழங்கி விட்டு  விடைபெற்று அவர் மீண்டும் பாதாளம் செல்வதாகவும் கதை நீண்டு கொண்டே செல்கிறது. ஆக ,ஒவ்வொரு பண்டிகைக்குள் ஒரு புராண கதை  இருந்தாலும் அது மக்களை மகிழ்விப்பதாகவும் அனைவரோடு சேர்ந்து குடும்பம் குடும்பமாக கொண்டாடக்கூடிய ஒரு திருவிழாவாகவும் பண்டிகைகள் இருப்பதால் நாம் கொண்டாடுவது நம் கடமை. 

 

Tags :

Share via