தனிநபர் ஆண்டு வருமானம்  1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்வு.நிதியமைச்சர்தகவல்.

by Editor / 28-08-2023 07:23:22pm
 தனிநபர் ஆண்டு வருமானம்  1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்வு.நிதியமைச்சர்தகவல்.

தமிழகத்தில் 2022-23 ஆண்டில்  தனிநபர் வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது, ஒன்றிய அளவில் 2022-23ல் 98 ஆயிரத்து 374 ஆக உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 'விலைவாசி உயர்வை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த வளர்ச்சி எதிர்மறையாக இருந்தபோது, தமிழக பொருளாதாரம் நேர்மறையாக ஒரு நிலையான இடத்தில்தான் இருந்தது. அதன்பிறகு தமிழகத்தின் பொருளாதார நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு திராவிட மாடல் அரசின் திட்டங்கள்தான் காரணம்' என்றார்.

 

Tags :  தனிநபர்ஆண்டுவருமானம் 1.66 லட்ச ரூபாயாக உயர்வு.

Share via