நிகர்ஷாஜியின்  சொந்த ஊரில் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்த உறவினர்கள்.

by Editor / 03-09-2023 08:07:47am
நிகர்ஷாஜியின்  சொந்த ஊரில் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்த உறவினர்கள்.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா L-1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து PSLV-C57 ராக்கெட் மூலம்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, அது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.  இந்தநிலையில், ஆதித்யா L-1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனரான நிகர்ஷாஜியின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சுலைமான் நபி பள்ளிவாசலில் நிகர்ஷாஜியின் அண்ணன் பேராசிரியர் சேக் சலீம் மற்றும் உறவினர்கள்  சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

Tags : நிகர்ஷாஜி

Share via