அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை என தகவல்

by Editor / 12-09-2023 09:03:45am
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை என தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்பில் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்றும் சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை தொடங்கியுள்ளதாகவும், சென்னையில் நுங்கப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்டஇடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக நுங்கப்பாக்கத்தில் உள்ள செந்தில் பாலாஜி நண்பர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

 

Tags : அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனை

Share via