ஆளுநர் ரவி 4 நாள் டில்லி பயணம்

by Staff / 12-09-2023 12:03:11pm
ஆளுநர் ரவி 4 நாள் டில்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செப்டம்பர் 12 ஆம் தேதி இன்று காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றார். கடந்த வாரம் 2 நாள் பயணமாக டில்லி சென்று வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி , இந்த முறை 4 நாள் பயணமாக டில்லி செல்கிறார்.இதனை தொடர்ந்து செப்டம்பர் 15 ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஆளுநர் சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின் நோக்கம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via