நலம் விசாரித்த ராகுல் காந்திக்கு நன்றி - வில்லேஜ் குக்கிங் தாத்தா

by Staff / 05-05-2024 01:38:53pm
நலம் விசாரித்த ராகுல் காந்திக்கு நன்றி - வில்லேஜ் குக்கிங் தாத்தா

பிரபல யூடியூப் சேனலான ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ தாத்தா பெரியதம்பி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் மருத்துவமனையில் இருந்த போது எனக்காக வேண்டிய மக்கள் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக போனில் என்னை தொடர்புகொண்டு நலம் விசாரித்த ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via