முதியவர்களை  தாக்கி நகை கொள்ளை-குற்றவாளிகளை தேடும் போலீசார்.

by Editor / 16-09-2023 11:38:36pm
முதியவர்களை  தாக்கி நகை கொள்ளை-குற்றவாளிகளை தேடும் போலீசார்.


தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே நள்ளிரவில்: வீடு புகுந்து வயதான தம்பதிகளை தாக்கி 10  பவுன் நகை   திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். சாம்பவர் வடகரை காவல்நிலையப்பகுதியான  ஊர் மேல்அழகியான் கிராமம்  போஸ்ட் ஆபீஸ்   தெரு குடியிருக்கும்  குலசேகரன் 75ராமலட்சுமி 70 வயதான தம்பதியர்கள்  அதிகாலை 3 மணி அளவில் தனியாக தூங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு வீட்டுக்குள் திடீரென  புகுந்த மர்ம நபர்கள் கட்டிலில் படுத்து இருந்த வயதான  தம்பதியர்களை   இரும்பு பைப்பை கொண்டு கை, கால், தலை பகுதியில் சரமாரியாக  தாக்கினார் இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் மயங்கினர். அதன் பின்னர்   ராமலட்சுமியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு   தப்பிச் சென்றனர். அதன் பின்னர் படுகாயம் அடைந்த முதியவரின்  அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த பிறகு இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில்  உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்தனர்   அவர்களை ஆட்டோவில் அழைத்து  அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், துணை கண்காணிப்பாளர் நாகசங்கர், இன்ஸ்பெக்டர் வேல்கனி ஆகியோ சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டுனர் இச்சம்பவம்  குறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து  டிஎஸ்பி நாகசங்கர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தெருக்களில் உள்ள  சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் . வயதான தம்பதிகளை கொடூரமான முறையில் தலை  கை கால்களில் தாக்கிய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என அவருடைய உறவினர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Tags : முதியவர்களை  தாக்கி நகை கொள்ளை-குற்றவாளிகளை தேடும் போலீசார்.

Share via