தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் கார்

by Staff / 01-10-2023 12:40:22pm
தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் கார்

நடுரோட்டில் எலக்ட்ரிக் கார் ஒன்று பற்றி எரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள ஜே.பி.நகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் கார் ஒன்று, திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், காரைவிட்டு இறங்கி உயிர் தப்பினார். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு புகைமண்டலமாக மாறியது. கார் தீப்பிடித்து எரிந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

Tags :

Share via