நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.கவிற்கு கூட்டணிக்கான மூன்று வாய்ப்புகள்- டிடிவி தினகரன்

by Staff / 01-10-2023 02:35:05pm
நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.கவிற்கு கூட்டணிக்கான மூன்று வாய்ப்புகள்- டிடிவி தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு கூட்டணிக்கான மூன்று வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பாஜக கூட்டணி, திமுக அல்லாத காங்கிரஸ் கூட்டணி அல்லது தனித்து போட்டியிடுவோம். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படாத அரசாக திமுக உள்ளது. கூட்டணி குறித்து சரியான நேரத்தில் சரியானதை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via