நடைபயணம் அக்:16 க்கு ஒத்திவைப்பு.

by Editor / 04-10-2023 11:36:46pm
நடைபயணம் அக்:16 க்கு ஒத்திவைப்பு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், 'என் மண் என் மக்கள்' நடைபயணம் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 6ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே உடல் சோர்வு, இருமல் மற்றும் தொண்டை வலி பிரச்சனை உள்ளதால் மேலும் 2 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அண்ணாமலையை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Tags : நடைபயணம் அக்:16 க்கு ஒத்திவைப்பு.

Share via