முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை பயணம் 

by Editor / 06-10-2023 09:49:12am
முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை பயணம் 

இன்றுபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு பயணம் மேற்கொள்கிறார். தஞ்சை மாநகராட்சி அரங்கில், திராவிடர் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக, திக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, தஞ்சையில் பல்வேறு இடங்களில் ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. விதிகளை மீறி ட்ரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags : முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை பயணம் 

Share via