திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில்  நடந்த சோதனையில் ஏராளமனமுக்கிய ஆவணங்கள் சிக்கியது...? 

by Editor / 19-10-2023 07:55:45am
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில்  நடந்த சோதனையில் ஏராளமனமுக்கிய ஆவணங்கள் சிக்கியது...? 


முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

அக்.10-ம் தேதி வரை நடைபெற்ற இந்த சோதனையில், ரொக்கம், நகைகள் முக்கிய ஆவணங்களை பெரிய பெட்டியில் வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 25 கோடி ரூபாய் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்களிடம் இருந்து மாணவர் சேர்க்கைக்காக 25 கோடி ரூபாய் பெறப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், சோதனைகளின்போது கணக்கில் வராத 32 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 28 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெகத்ரட்சகனின் அறக்கட்டளையில் இருந்து 300 கோடி ரூபாய் பல்வேறு தொழில்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய குழுமத்திற்கு இந்த பணம் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவீதா கல்வி குழுமம் சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான போலி கட்டண ரசீதுகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில்

Share via