இன்று ஆடி பெருக்கு என்பதால் பேரூர் படித்துறையில் அதிகளவிலான பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஆற்றிற்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

by Admin / 03-08-2021 02:45:22pm
இன்று ஆடி பெருக்கு என்பதால் பேரூர் படித்துறையில் அதிகளவிலான பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஆற்றிற்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.



கோவை பேரூர் படித்துறையில் களையிழந்த ஆடிப்பெருக்கு பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது
பேரூர் படித்துறைக்கு செல்லும் பாதை தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கன்று கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளா ன பக்தர்கள் பேரூர் படித் துறையில் திதி, தர்ப்பணம் கொடுப்பதற்காக வருவா ர்கள். மேலும் புதுமணத் தம்பதிகள் அதிகளவில் கூடி தாலி மாற்றி கொள்ளும் நிகழ்ச்சியும் நடக்கும். இதனால் அன்றைய தினம் பேரூர் படித்துறையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி களையிழந்தது. இந்த ஆண்டு ஆடிபெருக்கு விழாவுக்காக பக்தர்கள் காத்திருந்தனர்.
 
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா உயர தொடங்கியதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

அதன் ஒரு பகுதியாக ஆடி கிருத்திகை, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில் கோவையில் உள்ள மருதமலை சுப்பிர மணிய சுவாமி, பேரூர் பட்டீஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன், மேட்டுப் பாளையம் வனபத்ர காளிய ம்மன் கோவில் உள்ளிட்ட 4 முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யவும், ஆற்றங்கரையோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள் ளது.

இன்று ஆடி பெருக்கு என்பதால் பேரூர் படித்துறையில் அதிகளவிலான பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஆற்றிற்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை ஒரு சில பக்தர்கள் தடையையும் மீறி பேரூர் படித்துறைக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் படித்துறையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து விட்டு தரிசனம் செய்தனர். இதனை அங்கு பணியில் இருந்த போலீசார் பார்த்து, அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்து அனுப்பினர்.

தொடர்ந்து பக்தர்கள் வாகனங்களில் வந்தனர். அவர்களையும் போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து பக்தர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வாசலில் நின்று சாமியை தரிசனம் செய்து விட்டு திரும்பி சென்றனர். இதனால் நொய்யல் ஆற்றின் படித்துறை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பேரூர் படித் துறையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டதால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.

 

Tags :

Share via