புளியரை சோதனைச்சாவடியில் அதிகாரியிடம் கணக்கில் வராத 2.76 இலட்சம் பறிமுதல்.

by Editor / 19-10-2023 10:50:36pm
புளியரை சோதனைச்சாவடியில் அதிகாரியிடம் கணக்கில் வராத 2.76 இலட்சம் பறிமுதல்.

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியறையில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து தணிக்கை சாவடி செயல்பட்டு வருகின்றது. இந்த சோதனை சாவடியில் மூன்று ஆய்வாளர்கள் மற்றும் ஆறு உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் 24 மணி நேரத்திற்கு ஒரு ஆய்வாளர் ஒரு உதவியாளர் என பணியாற்றி வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு 24 மணி நேரமும் இந்த வழியாக கனிம வளங்கள் ஏற்றி 600க்கும் மேற்பட்ட வாகனங்களும் காய்கறி உள்ளிட்டு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி 500க்கும் மேற்பட்ட வாகனம் என சுமார் 1500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியே  சென்று வருகின்றன. இந்த வழியே செல்லும் கனரக வாகனங்கள் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் வாகனத்திற்கு தகுந்தவாறு இங்குள்ள சோதனை சாவடியில் பணம் கொடுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை பணியை முடித்துவிட்டு போக்குவரத்து சோதனை சாவடி  ஆய்வாளர் பிரேமா  ஞானகுமாரி  என்பவர் தனது காரில் புறப்பட்டு சென்ற பொழுது அதிகமான அளவில் லஞ்சம் வாங்குவதாக   கிடைத்த தகவலை தொடர்ந்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரது வாகனத்தை கற்குடி விலக்கில் வைத்து இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் திடீரென மறித்து துணைக்கண்காணிப்பாளர் பால்சுதர் சிறப்பு சோதனைக்குழு அலுவலர் கலைமதி ,ஆய்வாளர் ஜெயஸ்ரீ.உதவி ஆய்வாளர் ரவி உள்ளிட்ட குழுவினர் சோதனை செய்ததில் அவரது வாகனத்தில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சோதனை சாவடியில் சரக்குவாகனங்களில் இருந்து இனாமாக கொடுக்கப்பாட்டை முட்டை,பால்பாக்கெட்,பூ பாக்கெட்,கடலைமிட்டாய்,உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவரை புளியரை போக்குவரத்து சோதனை  சாவடிக்கு அழைத்து வந்து அங்கு விசாரணை மேற்கொண்டனர்.காலை 8.30 மணிக்குத்தொடங்க்ய சோதனை மாலை 6 மணிவரை நீடித்தது.இவரிடமிருந்து 2 இலட்சத்து 76ஆயிரத்து 400ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவருடன் பணியில் இருந்த இளங்கோ,செல்வகனேஷ் ஆகியோர் ஊருக்கு சென்றதால் அவர்கள் இந்த சோதனையிலிருந்து தப்பினர்.

 

Tags : புளியரை சோதனைச்சாவடியில் அதிகாரியிடம் கணக்கில் வராத 2.76 இலட்சம் பறிமுதல்.

Share via