நாளை திமுக  நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம். 

by Editor / 22-10-2023 07:39:24am
நாளை திமுக  நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம். 

 நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடர்பாக அக்டோபர் 23ஆம் தேதி திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பில், அக். 23ஆம் தேதி திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. காணொளிக் காட்சி வாயிலாக திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறும். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : நாளை திமுக  நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம். 

Share via