நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதோடு முதலிடத்திற்கு முன்னேறியது.

by Admin / 22-10-2023 10:58:24pm
 நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதோடு முதலிடத்திற்கு முன்னேறியது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இமாச்சலப் பிரதேஷ் தர்மசாலாவில் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய  நியூஸிலாந்து அணி மிக நிதானமாக ஆடியது. டரியல் ஸெல்[ 127 பந்தில்,130, ரவீந்தரா-75[ இருவரும் இணைந்து  அணிக்குவழு  சேர்த்தார். இருப்பினும் .அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை எடுத்தனர் . இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்காக நிர்ணயிக்க.. ரோகித் சர்மாவும் சுக்மன் கில்லும் இணைந்து 71 ரன்கள் எடுக்க..., போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில், ரோகித் சர்மா அவுட் ஆனார். அடுத்து வந்த கோலி சரியாக நின்று ஸ்டெடியாக நின்று இந்திய அணியை வெற்றியை நோக்கி நகர்த்த தொடங்கிய அடுத்தடுத்து சுக்மன் கில் ஸ்ரேயாஸ்,  கே ல் ராகுல், சூரியகுமார் யாதவ் என விக்கெட்டுகள் சரிந்தது. கோலியும் சடேஜாவும் இணைந்து ஆட்டத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல... கடைசி இரண்டு ஓவரில் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருந்த பொழுது 95 ரன்களை எடுத்து கோலி அவுட் ஆக.. அவரை தொடர்ந்து ஷமி உள்ளே இறங்க... சடேஜாவும் ஷமியும் கைகோர்த்து கைகோர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

 நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதோடு முதலிடத்திற்கு முன்னேறியது.
 

Tags :

Share via