லாபத்தை ஈட்டித் தரும் சூரியகாந்தி சாகுபடி

by Staff / 23-10-2023 03:17:43pm
லாபத்தை ஈட்டித் தரும் சூரியகாந்தி சாகுபடி

கடந்த சில மாதங்களாக கிருஷ்ணகிரி, ஏக்கல்நத்தம் கிராமத்தில் விவசாயிகள் புதிதாக சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து அவர்கள், "சூரியகாந்தி 80 - 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். அதே போல சூரியகாந்தி விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து வீட்டு தேவைக்கு பயன்படுத்துகிறோம். சுற்றுவட்டார கிராம மக்கள் எங்களிடம் சூரியகாந்தி விதைகள், எண்ணெய்யை நல்ல விலைக்கு வாங்கிச் செல்வதால், அதிக லாபம் கிடைக்கிறது" என தெரிவித்தனர்.
 

 

Tags :

Share via