இந்தியாவை கட்டியெழுப்ப தனது அரசு 8 ஆண்டுகளில் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டதாகபிரதமர் நரேந்திர மோடி

by Writer / 29-05-2022 01:47:38am
இந்தியாவை கட்டியெழுப்ப தனது அரசு 8 ஆண்டுகளில் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டதாகபிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் காந்திநகருக்கு.  ஒரு நாள் பயணமாகவந்தாா் அங்கு அவர் பல திட்டங்களை தொடங்கி வைத்தாா்., ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதுஸ்ரீ கேடிபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்து ஆய்வு செய்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,  காந்திஜி யும்  சர்தார் படேலும் விரும்பிய இந்தியாவை கட்டியெழுப்ப தனது அரசு 8 ஆண்டுகளில் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டதாவும் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்தியாவை காந்திஜி விரும்பினார். 3 கோடிக்கும்  அதிகமான ஏழைகளுக்கு புதிய   வீடுகள்  , 10 கோடிக்கும்  மேற்பட்ட   குடும்பங்களுக்கு    இலவசகழிப்பறை     9 கோடிக்கும்           மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு புகையிலிருந்து விடுதலை, 2.5 கோடிக்கு மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு மின்சாரம், 6 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் - இது வெறும் தரவுகள் அல்ல, ஏழைகளின் கண்ணியத்தைப்  பாதுகாப்பதில்   பாஜக அரசின் உறுதிப்பாட்டின் சான்றுகொரோனாதொற்று தொடங்கியபோது, ​​​​ஏழைகள் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கினர் - மத்திய அரசு நாட்டு மக்களுக்காக உணவு தானியக் கடைகளை இலவசமாக வழங்கியது.. பெண்களின் கண்ணியமான வாழ்க்கைக்காக, ஜன்தன் வங்கிக்  கணக்குகளுக்கு  நேரடிப்பணம்  பரிமாற்றம்  செய்யப்பட்டது. விவசாயிகளின்  வங்கிக் கணக்கில் பணம்செலுத்தியது.
 ஏழைகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்களைவழங்க  ஏற்பாடு செய்தது.  ​​ஏழைகளுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை அரசாங்கம் எளிதாக்கியது. தடுப்பூசிகள் வந்தபோது, ​​ஒவ்வொரு இந்தியருக்கும் இலவச தடுப்பூசிகளை அரசாங்கம் உறுதி செய்தது.
மகாத்மா மந்திரில் கருத்தரங்கில் பிரதமர்உரையாற்றினாா்., அங்கு அவர் இஃப்கோ, கலோலில் கட்டப்பட்ட நானோ யூரியா திரவஆலையையும் திறந்து வைத்தாா்.நானோ யூரியாவைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர் விளைச்சல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அல்ட்ராமாடர்ன்நானோ உரத் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. ஆலை ஒரு நாளைக்கு 500 மில்லி 1.5 லட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்யும்என்றுதொிவிக்கப்பட்டது.

இந்தியாவை கட்டியெழுப்ப தனது அரசு 8 ஆண்டுகளில் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டதாகபிரதமர் நரேந்திர மோடி
 

Tags :

Share via