சென்னை - சேலம் இடையே விமான சேவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடக்கம்.

by Editor / 29-10-2023 10:26:55am
சென்னை - சேலம் இடையே விமான சேவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடக்கம்.

சென்னை - சேலம் இடையே விமான சேவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. நாள்தோறும் சென்னையில் இருந்து காலை 11.30 மணிக்கும், சேலத்தில் இருந்து பகல் 1 மணிக்கும் இண்டிகோ விமானம் இயக்கப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் சேவை வழங்க முன்வந்துள்ளது. சென்னையில் இருந்து காலை 11.30-க்கு புறப்படும் விமானம் பகல் 12.30-க்கு சேலம் சென்றடையும்.

 

Tags : சென்னை - சேலம் இடையே விமான சேவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடக்கம்.

Share via